10-வது படிச்சிருந்தா போதும்…!! சத்துணவு மையத்தில் பணியிடங்கள்… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!

By Devi Ramu on தை 14, 2026

Spread the love

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 15 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு வரை படித்த அல்லது தேர்ச்சி பெறாத பெண்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்குத் தொடக்கத்தில் 3,000 ரூபாயும், ஓராண்டு பணிக்குப் பிறகு தகுதியின் அடிப்படையில் 9,000 ரூபாய் வரையிலும் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து சத்துணவு மையம் 3 கி.மீ தொலைவிற்குள் இருக்க வேண்டும் என்பது அவசியமாகும். இந்தப் பணிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இன்று (ஜனவரி 14) மாலை 5.45 மணி வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது. தகுதியுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அல்லது நேரில் சென்று தேவையான சான்றிதழ் நகல்களுடன் உடனடியாக விண்ணப்பித்துப் பயன் பெறலாம்.