BREAKING: கவிஞர் வைரமுத்துவிற்கு ஞானபீட விருது அறிவிப்பு..!!

By Soundarya on பங்குனி 14, 2026

Spread the love

பிரபல கவிஞர் வைரமுத்துவிற்கு இலக்கியத்திற்கான உயரிய விருதான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இலக்கிய உலகின் நோபல் பரிசு என்று போற்றப்படும் இந்த விருது, தமிழ் மொழியில் இதற்கு முன்பு அகிலன் மற்றும் ஜெயகாந்தன் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. வைரமுத்துவின் இலக்கியப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்த கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வைரமுத்து இதுவரை 12 கவிதைத் தொகுப்புகள், 10 நாவல்கள் மற்றும் 2 ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதித் தனது இலக்கியப் பயணத்தில் பெரும் சாதனைகளைப் புரிந்துள்ளார். அவர் ஆற்றிய இந்த மகத்தான சேவையைப் பாராட்டி, இலக்கியத்திற்கான இந்த உயரிய விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தமிழ் இலக்கியத் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாகக் கருதப்படுகிறது.