அம்பானி செய்த காரியத்தால் ஒட்டுமொத்தமாக காலியான படம்.. கடும் கோபத்தில் பொங்கி எழுந்த அசோக் செல்வன் & வசந்த் ரவி..

By Ranjith Kumar

Published on:

தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியை கண்ட படமான கண்ணாமூச்சி ஏனடா, கண்ட நாள் முதல் போன்ற படங்களை இயக்கிய முன்னணியை இயக்குனர் வி பிரியா அவர்கள் தற்போது நீண்ட நாள் பிறகு பொன் ஒன்று கண்டேன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் புதிய ஸ்டார் ஆக வளர்ந்து வரும் அசோக் செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி போன்றோர் நடித்த தற்போது படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படம் திரைக்கு எப்பொழுது வரும் என்று நீண்ட நாளாக எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இப்படத்தை தயாரித்த ஜியோ நிறுவனமான அம்பானி குரூப்ஸ் இப்பட குழுவின் எந்த அறிவிப்பும் ஆலோசனையும் இன்றி படத்தை தனியார் சேனல் ஒன்றுக்கு விற்பனை செய்து உள்ளார்களாம். இதை நீண்ட நாளாக பிரியா அவர்கள் எடுத்து திரைக்கு கொண்டு வரும் வேண்டுமென்று நினைத்த பட்சத்தில், படக்குழுவின் இடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாமல் இவர்களுக்கே தெரியாமல் படத்தை வினியோகம் செய்தது பெரிய வருத்தத்தக்க விஷயம் என்று படக்குழுவினர் தெரிவித்து இருக்கிறார்கள். ஓ மை கடவுளே, போர் தொழில், ப்ளூ ஸ்டார் போன்ற வரிசையாக வெற்றி படங்களை குவித்து கொண்டிருக்கும் அசோக் செல்வனுக்கு தற்போது ரசிகர் கூட்டங்கள் பெருகிக்கொண்டே இருக்கிறது, இந்த நிலையில் இவரின் அடுத்த படத்திற்காக திரையரங்கில் காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதால் அசோக் செல்வனால் இதை என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள்.

   

இதற்காக தற்போது கூட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த “வசந்த் ரவி” அவர்கள் இதை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அதாவது, இப்படத்தில் இயக்குனரும் நடிகர்களுக்கும் படத்தை தயார் செய்வது மட்டும்தான் வேலை என்றாலும், இருந்தாலும் இதில் எங்களுக்கும் பங்கு உண்டு என்று நினைக்கிறோம். இப்படத்தை விநியோகம் செய்யும் தயாரிப்பாளருக்கு தான் முழு உரிமை இருந்தாலும், எங்களிடம் தற்போது பேச்சுவார்த்தியோ அல்லது ஆலோசனையோ செய்திருக்கலாம்.

ஆனால் எங்களிடம் அறிவிப்பும் பேச்சுவார்த்தையும் இல்லாமல் படத்தை விநியோகம் செய்தது கண்டிக்கத்தக்க விஷயம் என்று, மனம் உருகி இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அதற்காக தற்போது தயாரிப்பு நிறுவனமான ஜியோ குரூப்ஸ் அவர்களும் படக்குழுவினர்களும் இணைந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளார்களாம், கூடிய விரைவில் இப்படத்தின் திரைக்கு வருமா அல்லது நேரடியாக ஒளிபரப்பாகப்படுமா என்று செய்தி கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Ranjith Kumar