வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தம்..? தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி..!!

By Soundarya on தை 31, 2026

Spread the love

தமிழகத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டு வரும் நிலையில், பல மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் போதிய நிதி இருப்பு இல்லை என்ற காரணத்தைச் சொல்லி, கடன் வழங்க மறுப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயம் சார்ந்த அத்தியாவசியத் தேவைகளுக்காக நகைக் கடனை நம்பியிருக்கும் கிராமப்புற மக்கள் பெரும் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

கூட்டுறவுத் துறை தரப்பில் நிதி மேலாண்மை குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும், சில இடங்களில் தொழில்நுட்பக் காரணங்களால் கடன் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் விநியோகம் எப்போது சீராகும் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த விவகாரம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.