கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்குபவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

By Nanthini on கார்த்திகை 20, 2025

Spread the love

பொதுவாகவே நாம் அவசர தேவை என்றால் நம்மிடம் இருக்கும் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து பணம் பெறுவது வழக்கம். நாம் அடகு வைக்கக்கூடிய நகைக்கி பொருத்தவாறு வங்கிகளில் இருந்து நமக்கு கடன் வழங்கப்படும். அதற்கு வட்டி செலுத்தி வரும் பட்சத்தில் வருடத்திற்கு ஒருமுறை அதனை மீண்டும் திருப்பி வைக்க வேண்டும். ஒருவேளை அப்படி முயலாவிட்டால் நகைகள் ஏலத்தில் விடப்படும். தற்போது நகைக்கடன் விதிகளில் தொடர்ந்து பல மாற்றங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.

அதன்படி கூட்டுறவு வங்கிகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட்டு வந்தது. இதை 7000 ரூபாயாக உயர்த்தி வழங்க கடந்த மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனாலும் வங்கிகளில் பழைய தொகைக்கு மேல் கடன் வழங்க மறுப்பதாக மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து கடன் தொகையை உயர்த்தி வழங்கும் அதிகாரப்பூர்வ உத்தரவை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்துள்ளார். இதைத்தொடர்ந்த இனி நகைக்கடன் தொகை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.