அதிர்ச்சி ரிப்போர்ட்: 3 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்த நகைக்கடன்…. சத்தமில்லாமல் உயரும் கடன் சுமை…!

By Nanthini on சித்திரை 15, 2026

Spread the love

இந்தியாவில் தனிநபர் பொருளாதாரத் தேவைகளுக்காகத் தங்கத்தை அடமானம் வைத்துப் பெறப்படும் நகைக்கடன்களின் அளவு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக ‘சிபில்’ (CIBIL) நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடந்த 2022 மார்ச் முதல் 2025 டிசம்பர் வரையிலான குறுகிய காலக்கட்டத்தில் நகைக்கடன்களின் மொத்த மதிப்பு சுமார் 3.8 மடங்கு உயர்ந்து பிரமிக்க வைத்துள்ளது.

வங்கித்துறையைப் பொறுத்தவரை, பொதுத்துறை வங்கிகள் இச்சந்தையில் தங்களது ஆதிக்கத்தை 57 சதவீதத்திலிருந்து 62 சதவீதமாக அதிகரித்துள்ளன; அதேபோல் கடன் வாங்குபவர்களில் பெண்களின் பங்களிப்பும் 39 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இத்துறையில் முதல்முறையாகக் கடன் பெறுவோரின் எண்ணிக்கை 10 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகச் சரிந்துள்ள நிலையில், ஏற்கனவே கடன் பெற்றவர்களே மீண்டும் மீண்டும் நகையை அடமானம் வைக்கும் போக்கு அதிகரித்திருப்பதை இந்த அறிக்கை மிகத்தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.