சர்ப்ரைஸ் பிளான்…. தமிழக அரசு ரகசியமாக சேகரிக்கும் லிஸ்ட்… மாஸ் காட்டப்போகும் நகைக்கடன் தள்ளுபடி…. வெளியாகப்போகும் குட் நியூஸ்…!

By Nanthini on ஆடி 19, 2026

Spread the love

கூட்டுறவு மற்றும் அரசு வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களைத் தமிழ்நாடு அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திடீர் நடவடிக்கை காரணமாக, தமிழக மக்களிடையே 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பும், பரவலும் ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களிலும் இது போன்ற தரவு சேகரிப்புகளுக்குப் பின்னரே முக்கியக் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் வெளியானதால், பொதுமக்கள் மத்தியில் இது ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பாக வரும் என நம்பப்படுகிறது. இருப்பினும், இத்திட்டம் குறித்து தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான அறிவிப்போ அல்லது விளக்கமோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.