தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகவே உள்ளது. அதிலும் விஜயின் தமிழக வெற்றிக்கழக கட்சியில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் இணைந்த பிறகு மாற்று கட்சியினர் பலரும் கட்சி தாவி வருகிறார்கள். குறிப்பாக அதிமுகவில் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை டார்கெட் செய்து செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைத்து வருகின்றார். இந்நிலையில் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை சந்தித்து ஜே சி டி பிரபாகரன் அக்கட்சியில் இணைந்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜே சி டி பிரபாகரன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்தார். புகழேந்தி மற்றும் கே சி பழனிசாமி ஆகியோருடன் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழுவிலும் அவர் செயல்பட்டார். கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக வில்லிவாக்கம் பகுதியில் போட்டியிட்டு 10,782 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றிருந்தார். தற்போது அவர் விஜய் கட்சியில் இணைந்துள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் தேவையாக உள்ளது, அதற்காகவே நான் விஜய்யுடன் இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…
நடிகர் விஜய் அவர்கள் 4-வது முறையாக ஆளுநரைச் சந்தித்து, ஆட்சி அமைப்பதற்கான தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் தனது…
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குர்ஹானி பகுதியில், காதலனுடன் பேசிக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைப்பதைத் தடுக்கும் உள்நோக்கத்துடன் ஆளுநர் அனுமதி மறுத்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்தாலும், திமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.…