தமிழக காங்கிரஸ் அழிவின் பாதையில் சென்று கொண்டிருப்பது கவலை தெரிவிப்பதாக ஜோதிமணி கருத்து தெரிவித்திருந்த நிலையில் அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், கையில் ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருக்காது. இருந்தாலும் அனைவரையும் அரவணைத்தே செல்கின்றேன். தேர்தல் படிவம் மற்றும் முகவர்கள் போடுவது தொடர்பான பிரச்சனை இருந்தது உண்மைதான். அதனை தீர்த்து வைத்தாயிற்று. கரூர் மாவட்ட காங்கிரஸில் உட்க்கட்சி பிரச்சனை இருப்பது உண்மைதான். அது பற்றி ஜோதிமணி குற்றம் சாட்டிய போது என்னால் ஆன நடவடிக்கையை மேற்கொண்டேன்.
ஆனால் ஜோதிமணி பொத்தாம் பொதுவாக பொதுவெளியில் குற்றம் சாட்டுவது அதிர்ச்சி அளிக்கின்றது. எனக்கு உட்பட அதிகாரத்தின் படியே செயல்படுகின்றேன். ஜோதிமணி இணையத்தில் அவர்தான் பதிவிட்டாரா என்று எனக்கே சந்தேகமாக உள்ளது என்று செல்வ பெருந்தகை கூறியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தில் நெருக்கி கொண்டிருக்கும் சூழலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஏற்கனவே ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள நிலையில் தற்போது உட்கட்சி பிரச்சனையும் விலகி வருவது வெளிப்படையாகவே உறுதியாகி உள்ள நிலையில் காங்கிரஸ் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கங்கள் கூறுகின்றனர்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…