‘வாரிசு’ திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிக்க ஜெயசுதா வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?… வைரலாகும் தகவல்… ஷாக்கான ரசிகர்கள்…

By Begam on மாசி 18, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘வாரிசு’. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. முக்கியமாக குடும்பங்கள் கொண்டாடும் படமாக வாரிசு திரைப்படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

   

இத்திரைப்படத்திற்கு போட்டியாக நடிகர் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படமும் ரிலீஸ் ஆனது. வசூலில் இரண்டு திரைப்படங்களுமே சாதனை படைத்து வருகின்றது. தற்பொழுது உலக அளவில் வாரிசு திரைப்படம் 300 கோடிக்கு உள்ள வசூல் செய்ததாக, இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே அறிவித்துள்ளது.

   

 

வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து சாம் ,பிரகாஷ் குமார், ஸ்ரீகாந்த், சரத்குமார், ஜெயசுதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை  தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருந்தார்.

நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து அசத்தியிருந்தார். தற்போது திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுபவர் நடிகை ஜெயசுதா.

இவருக்கும் நடிகர் விஜய்க்கும் இடையேயான தாய், மகன் சென்டிமென்ட் காட்சிகள் ரசிகர்களின் கண்களை கலங்க வைத்தது. தற்பொழுது இத்திரைப்படத்தில் விஜய்க்கு தாயாக நடிக்க ஜெயசுதா ரூபாய் 30 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.