‘ஜெயம்’ படத்தை பார்த்துவிட்டு ஏன் இவ்ளோ செலவு பண்ணிருக்கீங்கனு கேட்ட ரஜினி.. ஒரு வார்த்தையில் ரஜினியை உறையவைத்த ஜெயம் ரவியின் அப்பா ..

By Archana on ஜனவரி 23, 2024

Spread the love

சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகள் அடுத்தடுத்து சினிமாவில் ஹீரோவாக நடிப்பது என்பது சாதாரண விஷயம். அதே நேரம் சினிமாவில் கேமராவுக்கு பின் வேலை செய்யும் கலைஞர்களின் வாரிசுகள் சினிமாவுக்கு வருவது அவ்வளவு எளிதல்ல. அப்படி வந்தாலும் அவர்கள் சினிமாவில் காலூன்றுவது என்பது கடினம். அப்படி சினிமா பின்புலத்தில் இருந்து வந்தாலும், தனக்கென்று தனி அடையாளங்களை பெற்றிருப்பவர்கள் நடிகர் ஜெயம் ரவி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா. இவர்களின் தந்தை எடிட்டர் மோகன்.

#image_title

சினிமாவில் ஒரு எடிட்டராக தனது பயணத்தை தொடங்கிய மோகன் பிற்காலத்தில் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் சுமார் 63 வருட அனுபவம் உள்ளவர் மோகன். 1954-ம் ஆண்டு சினிமாவுக்கு வந்தவர் 50 மொழி மாற்று படங்களையும், 17 நேரடி படங்களையும் தயாரித்து இருக்கிறார். இவரது மூத்த மகன் மோகன் ராஜா, ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவரது இரண்டாவது மகனான ரவியும், இதேப் படத்தில் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

   
   

குடும்பமாக சேர்ந்து முன்னேறுவது என்பது இவர்களை பார்த்து கற்றுக் கொள்ளலாம். தந்தை தயாரிக்க, மூத்த மகன் இயக்க, இளைய மகன் நடிக்க என தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் வளர்ந்து கொள்வர். அப்படி இந்த மூவர் கூட்டணி ஒன்றினையும் போதெல்லாம், அமையும் படங்கள் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும். அப்படி தான் ஜெயம் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. மோகன் ராஜா இயக்கத்தில், ரவி, சதா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியானது ஜெயம் படம்.

 

தெலுங்கில் 2002-ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தை, அதேப் பெயரில் தமிழில் ரீமெக் செய்திருந்தனர். படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜா, ஜெயம் ராஜா எனவும், ரவி ஜெயம் ரவி எனவும் பிரபலமானார்கள். தெலுங்கில் இசையமைத்திருந்த ஆர்.பி.பட்நாயக்கே தமிழிலும் இசையமைத்திருந்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து முழு படத்தையும் பார்க்க, படத்தின் தயாரிப்பாளர் மோகன் கிளம்பியுள்ளார்.

#image_title

அப்போது அவருக்கு போன் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தானும் படத்தை பார்க்க வருவதாக அடம்பிடித்துள்ளார். சரி என மோகன் கூற, தனது மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் என குடும்பத்துடன் ஜெயம் படத்தின் முன்னோட்டக் காட்சியை பார்த்துள்ளார் ரஜினி. இடைவேளையின் போது, மோகனை சந்தித்த ரஜினி, எதற்கு இவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள் எனக் கேட்டாராம். அதற்கு பதிலளித்த மோகன், தனது இரு மகன்களின் எதிர்காலமாச்சே எனக் கூறினாராம். இந்த சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் மோகன்.

#image_title