தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் முதலில் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலையில், கமல்ஹாசன் நாயகனாக நடித்த ஆளவந்தான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பிறகு திடீரென ஹீரோவாக அறிமுகமாகி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இவர் முதன்முதலில் ஜெயம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாஸ், மழை , உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் ஜெயம் ரவி 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவியும் ஆர்த்தியும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் இருந்த நிலையில் தற்போது ஆட்சியை விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார். இருந்தாலும் அவரை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை வெளியிடவில்லை.

இந்நிலையில் ஜெயம் ரவியின் மனைவி யார்? அவருடைய பெற்றோர் யார் என்ற தகவல் அதிகம் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. அதன்படி ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி பிரபல சின்னத்திரை தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் ஒரே மகள். ஜெயம் ரவியை விட மூன்று மடங்கு கோடீஸ்வர குடும்பத்தில், அதுவும் ஒரே மகளாக வாழ்ந்தவர். தனது பள்ளி படிப்பை சென்னையில் முடித்த அவர் பிறகு பிரபல தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். கல்லூரியில் நடைபெற்ற விழாவில் ஜெயம் ரவி ஆர்த்தியை சந்தித்துள்ளார்.

பிறகு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் கல்லூரி படிப்பை முடித்த பிறகு ஜெயம் ரவி சினிமாவில் கவனம் செலுத்த ஆர்த்தியும் ஸ்காட்லாந்தில் இரண்டு வருட பட்டப்படிப்பை முடித்தார். பிறகு இருவரும் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். சுஜாதா மற்றும் விஜயகுமார் இருவரும் தங்களது மகளின் ஆசைக்காக திருமணத்திற்கு எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆர்த்தி அம்மா சுஜாதா விஜயகுமார், சுஜாதா ஹோம் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் மூலமாக சன் டிவியில் ஏராளமான சீரியல் தயாரித்துள்ளார். ஜெயம் ரவியை வைத்தும் இவர் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
