அந்தக் கொலைய நான் பண்ணல.. மீண்டும் திரில்லர் கதையில் ஜெயம் ரவி.. சஸ்பென்ஸ் நிறைந்த ‘சைரன்’ பட டிரைலர்

By Ranjith Kumar

Published on:

20ளில் ஜெயம் படம் மூலம் அறிமுகமாகி ஜெயம் ரவி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், ஆக்சன் கலந்த லவ் சப்ஜெக்ட்டில் பட்டைய கிளப்பி கொண்டிருந்தார் அந்த சமயத்தில், அதன் பின் அவருக்கு சரியாக படம் அமையவில்லை, அமைந்தாலும் அந்த படம் சரியாக ஓடவும் வில்லை, சிறிது காலம் ஏற்றம் இறக்கத்தோடு படம் பண்ணிக் கொண்டிருந்தார்.

   

அதன் பின் தற்போது மிகப்பெரிய இயக்குனரான மணிரத்தின் கூட்டணியில் ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர் ராய் போன்ற மிகப்பெரிய பிரபலங்களுடன் இணைந்த பொன்னின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் இரண்டு படங்கள் மூலமாக ஜெயம் ரவி அவர்கள் தமிழ்த் துறையில் மீண்டும் காள் எடுத்து வைத்து மக்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். பொன்னின் செல்வனின் பிரம்மாண்ட வெற்றியை பார்த்து அனைத்து இயக்குனர்களும் ஜெயம்ரவி இடம் வந்தார்கள், ஆனால் அவர் அதன் பின்னும் இறைவன், அகிலன் போன்ற படங்களில் நடித்து மீண்டும் சொதப்பி, அப்ப படங்கள் சரியாக எதுவும் போவாத நிலையில்.

இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் அவர்களுடன் இணைந்து சய்ரன் என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் டிரைலர் இப்பொழுது வெளியாகி உள்ளது. அவர் சிறு வயதில் செய்யாத கொலைக்கு தண்டனை அனுபவித்து தற்போது தண்டனை காலம் முடிந்து வெளிவந்த பின்னும், அவர் பொன்னும் இந்த சமூகமும் அவரை இன்னும் குற்றவாளியாகவே பார்த்து கொண்டுதான் உள்ளார்கள். உண்மையில் அந்த கொலை இவர்தான் செய்தாரா என்று கண்டறியவதற்காக கீர்த்தி சுரேஷ் அவர்கள் போலீசாக இப்படத்தில் இணைந்து, அந்த முடிந்துபோன கேஸ் பைலை ரீவிசாரணை செய்கிறார். அந்த கொலை வழக்குக்கு சம்பந்தப்பட்ட நபர்களை கீர்த்தி சுரேஷ் விசாரித்த பின் அவர்கள் அனைவரும் மர்மமாக இறக்கிறார்கள்.

இதை பார்த்த பத்தி பத்திரிக்கை துறைக்கும் மக்களுக்கும் இந்த கொலைக்கு கீர்த்தி சுரேஷ் காரணமா என்று பல கேள்விகளும் சர்ச்சைகளும் எழுகிறது, அதை தாண்டியும் கீர்த்தி சுரேஷ் அவர்கள் அந்த முடிந்து போன கொலை வழக்கை மீண்டும் துடைத்து எடுத்து இதை ஜெயம் ரவி தான் செய்தாரா, இந்த கொலையை ஜெயம் ரவி தான் செய்தாரா இல்லை இதில் ஏதும் சதி உள்ளதா என்று பல பிரச்சினைகளுக்கு நடுவில் இக்கதையை நகர்த்தி செல்கிறார் கீர்த்தி சுரேஷ் அவர்கள். சுவாரசியமாக கொண்டு செல்லும் வகையில் டைலர் அமைந்துள்ளது. ஜெயம் ரவி பொன்னின் செல்வன் படத்திற்குப் பிறகு எதுவும் ஓடாத நிலையில் இப்பட ட்ரெய்லர் ரிலீஸ் ஆனதால், இந்த படம் திரைக்கு வருவதற்கு மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Ranjith Kumar