“என் மனைவியின் குடும்பத்திற்காக இவர் காலில் விழுந்தேன்..!” செய்தியாளர் சந்திப்பில் கதறிய ஜெயம் ரவி.. யார் அந்த மர்ம நபர்..?

By Swetha on வைகாசி 17, 2026

Spread the love

நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் அவரது மனைவி ஆர்த்திக்கு இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நீடித்து வரும் நிலையில், அண்மையில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடகி கெனிஷாவுக்கு எதிராக நெட்டிசன்கள் பகிர்ந்து வந்த விமர்சனங்களால் அவர் சமூக ஊடகங்களை விட்டு விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இதுவரை அமைதி காத்து வந்த ரவி தற்போது ஊடகங்கள் முன் தோன்றியுள்ளார். ஆர்த்தியுடனான திருமண வாழ்க்கையில் தான் அனுபவித்த வேதனைகளையும், தன் குடும்ப வாழ்க்கையைக் காப்பாற்ற எவ்வளவு தூரம் இறங்கிச் சென்றேன் என்பதையும் இந்த சந்திப்பில் அவர் மிகவும் எமோஷனலாக வெளிப்படுத்தியுள்ளார்.

தன் முன்னாள் மனைவியின் குடும்ப மரியாதையைக் காப்பாற்ற தான் ஒரு நபரின் காலில் விழுந்ததாக ரவி இந்த பேட்டியில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். “அந்தக் குடும்பத்தில் ஏற்கனவே ஐந்து விவாகரத்துகள் நடந்துவிட்டன; ஆறாவதாக மற்றுமொரு விவாகரத்து நடந்துவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் நான் அந்த அளவுக்குத் தாழ்ந்து போனேன்” என்று தன் ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும், தன் திருமண வாழ்க்கையை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தான் அந்தச் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

   

இதற்கிடையில், பேட்டியின் போதே “ஒரு நிமிடம்” என்று கூறி அங்கிருந்த ஒரு நபரை ரவி மேடைக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியது அங்கிருந்தவர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அந்த நபர் ஆர்த்தியின் உறவினரா அல்லது குடும்ப நண்பரா என்ற தெளிவான விளக்கத்தை அளிக்காத ரவி, “நான் அந்தக் குடும்பத்தில் எப்படி கஷ்டப்பட்டேனோ, அதேபோல் கஷ்டங்களை அனுபவித்துவிட்டு அங்கிருந்து தப்பித்தவர் தான் இவர், இவருடைய காலில் தான் என் முன்னாள் மனைவிக்காக நான் விழுந்தேன்” என்று கூறினார். அடையாளம் காட்டப்படாத அந்த நபரின் வருகையும் ரவியின் இந்த அதிரடிப் பேச்சும் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.