தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயம் ரவி.
2003 ஆம் ஆண்டு தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.
தொடர்ச்சியாக நல்ல படங்களில் நடித்து வெகு விரைவில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நடிகராக இடம் பிடித்தார்.
எந்த ஒரு சூழலிலும் வித்தியாசமான கதைகளை கையாள ரவி என்றுமே தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி கடந்த 21 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் மிக சிறந்த நடிகராக அவர் பயணித்து வருகின்றார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் அவருடைய நடிப்பில் வெளியான மிருதன், அதனைத் தொடர்ந்து வெளியான போகன், வனமகன், அடங்கமறு மற்றும் கோமாளி போன்ற திரைப்படங்கள் ஜெயம் ரவியின் நடிப்புத்திறனை வழிகாட்டும் மிக சிறந்த திரைப்படங்களாக அமைந்தது.
அதுமட்டுமல்லாமல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழி வர்மனாகவே வாழ்ந்தார் ஜெயம் ரவி என்றால் அது மிகையல்ல.
இப்படி தொடர்ச்சியாக தனது நேர்த்தியான நடிப்பை அவர் வெளிப்படுத்தி வந்த நிலையில் இந்த ஆண்டு தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக சமீபத்தில் அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட நிலையில் அது பரபரப்பை கிளப்பியது.
இதனை தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்த வரும் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக பிரதர் திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், பூமிகா மற்றும் சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
விரைவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் துபாய் நாட்டில் மிதக்கும் சொகுசு கப்பலில் இந்த திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு பிரம்மாண்டமாக நடந்துள்ளது. தற்போது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…
சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…
சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…