பிரபல பாடகி வலையில் சிக்கிய ஜெயம் ரவி?.. கோவா ட்ரிப்பால் கழட்டி விடப்பட்ட ஆர்த்தி.. பரிதவிக்கும் பிள்ளைகள்..!!

By Nanthini on புரட்டாதி 18, 2024

Spread the love

சினிமாவை பொறுத்த வரையில் நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வதும் அதன் பிறகு சில காரணங்களால் விவாகரத்து செய்து பிரிவதும் வாடிக்கையாக்கிவிட்டது. பொதுவாகவே சினிமா நட்சத்திரங்களின் விவாகரத்து செய்தி என்பது ஓரிரு நாட்களில் ரசிகர்களின் கண்ணீர் பதிவுடன் முடிந்து விடும். ஆனால் நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து செய்தி மட்டும் வெடித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது இந்த பிரச்சனைக்கு பாடகி ஒருவர் காரணமாக கூறப்படுகின்றார். சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை வைத்திருந்த ஜெயம் ரவி கிசுகிசுவில் கூட இதுவரை சிக்காமல் இருந்து வந்தார்.

   

தற்போது ஒரு விவாகரத்தைச் செய்தியால் மொத்த பரபரப்புக்கும் காரணமாகியுள்ளார். கடந்த வாரம் திடீரென்று ஜெயம் ரவி விவாகரத்தை அறிவித்திருந்தார். ஆனால் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி எந்த ஒரு பதிவும் போடாமல் இருந்தார். பிறகு இரண்டு நாட்களில் அவர் தரப்பிலிருந்து இதில் எனக்கு உடன்பாடு இல்லை என பதில் வந்தது. என் கணவர் சுயநலத்திற்காக இப்படி செய்ததாகவும் என்னை பற்றி அவதூறு பேசாதீர்கள் என்றும் அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

   

 

இந்த நிலையில் ஜெயம் ரவி தன்னுடைய நண்பர்களுடன் அடிக்கடி கோவா செல்வது வழக்கம். அப்படி ஒரு கோவா ட்ரிப்பில் பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவரை சந்தித்துள்ளார். இவர் பெங்களூரை சேர்ந்தவர். கோவா பப்புகளில் பாடுவார். ஆல்பம் சாங்கிலும் நடித்துள்ளார். தமிழில் பிரபல நடிகர் தயாரித்த ஆல்பம் ஒன்றில் இவர் பாடியிருக்கிறார். ஏற்கனவே திருமணம் ஆனவர். இந்த நிலையில் இருவருக்கும் நட்பு உருவானதால் அந்த நட்பால் ஜெயம் ரவி திசை திரும்பியுள்ளார்.

இன்னும் சொல்லப்போனால் ஜெயம் ரவி ஆர்த்தி திருமண நாளுக்கு கூட குடும்பத்துடன் இல்லாமல் கோவா சென்றுள்ளார். கடந்த ஜூலை மாதம் ஜெயம் ரவியின் சொகுசு காரில் பாடகி பயணம் செய்த போது காவல்துறையிடம் கருப்பு நிற கண்ணாடியால் அபராதம் கட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் அதே மாதம் ஒரே வாரத்தில் அதே காருக்கு ஓவர் ஸ்பீடால் ஜெயம் ரவி அபராதம் கட்டியுள்ளார். இந்த விவகாரம் தான் தற்போது விவாகரத்தில் மேலும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஹோட்டலில் ஜெயம் ரவி இருப்பதாக ஆர்த்திக்கு தகவல் வர அவரை தேடி அங்கு சென்றபோது கூட ஆர்த்தியை ஜெயம் ரவி உள்ளே அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நட்பு விவகாரம் ஒரு கட்டத்தில் வெளியில் தெரிய வந்த பிறகு ஆர்த்தி கடுப்பில் இன்ஸ்டாவில் இருந்த ஜோடி போட்டோக்கள் அனைத்தையும் நீக்கி உள்ளார். இருந்தும் கணவனை விட முடியாமல் பேச முயற்சி செய்து தோற்றுள்ளார். ஆர்த்தி கவலையில் இருக்க ஜெயம் ரவி கோவாவில் கொண்டாட்டத்தில் இருந்து உள்ளார்.

ஆர்த்தியின் குடும்பம் மற்றும் ஜெயம் ரவியின் குடும்பம் இணைந்து இருவரை சேர்க்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் ஜெயம் ரவி போவா தோழி பேச்சைக் கேட்டு ஆடுவதாக கூறப்படுகிறது. பிறந்தநாளுக்கு அப்பா வருவார் வருவார் என்று காத்துக் கொண்டிருந்த பிள்ளைகளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஏனென்றால் செப்டம்பர் 10ஆம் தேதி தனது பிறந்தநாளுக்கு முன்பாகவே ஜெயம் ரவி விவாகரத்து அறிக்கையை வெளியிட்டு விட்டார். இந்த விவகாரம் மேலும் சர்ச்சையாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.