கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அறிவழகன் (72) காலமானார். தனது வீட்டில் அமர்ந்திருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கிருஷ்ணாயபுரம் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற இவர் அதிமுகவில் முக்கிய பொறுப்புகளையும் வகித்தவர். இவருடைய மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
