திடீர் டுவிஸ்ட்..! வீட்டில் மீண்டும் ஜெயலலிதா புகைப்படம்… முடிவை மாற்றினார் OPS …!

By Soundarya on பங்குனி 10, 2026

Spread the love

ஓ. பன்னீர்செல்வம் (OPS) சமீபத்தில் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, தனது வீட்டிலிருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் செயல் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானதுடன், அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இணையத்தில் அவர் மீதான எதிர்மறையான கருத்துக்கள் வேகமாகப் பரவின.

இந்தச் சூழலில், OPS-ன் இளைய மகன் ஜெயபிரதீப் தனது தந்தை திமுகவில் இணைந்ததால் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், அவர் OPS-உடன் பேசுவதைத் தவிர்த்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. குடும்பத்திற்குள் ஏற்பட்ட இந்த மனக்கசப்பும், சமூக வலைதள விமர்சனங்களும் OPS-ஐ தனது முடிவை மறுபரிசீலனை செய்யத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.

   

இதன் விளைவாக, OPS தற்போது தனது முடிவை மாற்றி, தனது வீட்டில் மீண்டும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்துள்ளார். தற்போது அவரது அறையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகிய இருவரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த மாற்றம் அரசியல் அரங்கில் மீண்டும் ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளது.