அன்று ஜெயலலிதா செய்த அதே தப்பு?…. “உங்களுக்கு கேடு காலம் ஆரம்பிச்சுடுச்சு”…. விஜய்யை நேரடியாக எச்சரித்த திமுக மூத்த தலைவர்…..!

By Nanthini on ஆவணி 22, 2026

Spread the love

சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், “விஜய் அவர்களே, திருவொற்றியூர் கூட்டத்தின் வாயிலாக உங்களுக்கு ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போதுதான் உங்களுக்கு கேடு காலம் ஆரம்பித்துள்ளது. 1991-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த இரண்டே மாதங்களில் டான்சி நில விவகாரம் பெரும் சர்ச்சையானது போல, தற்போதைய ஆட்சியிலும் முதல் இரண்டு மாதங்களிலேயே டெண்டர் முறைகேடுகள் புகார்கள் எழுந்துள்ளன. அன்று எதிர்க்கட்சியில் பெரிய பலம் இல்லாததால் ஏற்பட்ட ஆணவமே ஜெயலலிதாவை டான்சி நிலம் வாங்கியதை நியாயப்படுத்த வைத்தது; அதே போன்றதொரு சூழலும் போக்கும் தான் தற்போதும் தொடர்கிறது” எனக் கடுமையாகச் சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், அன்று தாம் தான் டான்சி நில விவகாரத்தில் முதன்முதலில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆவணங்களை வெளிக்கொண்டு வந்ததாகக் குறிப்பிட்டார். “ஜெயலலிதா அன்று வாய்விட்டுச் சிக்கிய அந்த வழக்கின் தொடர்ச்சியே இறுதியில் அவரைச் சிறைக்குச் செல்ல வழிவகுத்தது; தற்போதைய ஆட்சியிலும் முதலாவது வழக்கே இதே போன்ற சென்டிமென்டான புள்ளியில்தான் தொடங்கியுள்ளது” என்று எச்சரிக்கை தொனியில் பேசினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேர்ந்த இறுதிக்கட்ட நிகழ்வுகளையும், தற்போதைய அரசியல் சூழலையும் ஒப்பீடு செய்து ஆர்.எஸ். பாரதி பேசிய இந்த உரையானது, அரசியல் வட்டாரத்தில் கடுமையான கண்டனங்களையும் காரசாரமான விவாதங்களையும் கிளப்பியுள்ளது