“அம்மாவின் வாரிசு நான்தான், என்கிட்ட எல்லாம் ஆதாரமும் இருக்கு”… தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பும் ஜெயலட்சுமி…!

By Nanthini on தை 12, 2026

Spread the love

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு தான்தான் என்று கூறிவரும் ஜெயலட்சுமி என்கிற அம்ருதா, சமீபத்தில் அளித்த பேட்டி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவைப் போன்றே தோற்றமளிக்கும் வகையில் உடை அணிந்து வலம் வரும் இவர், அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணலுக்குச் சென்றபோது அங்கிருந்தவர்களால் வெளியேற்றப்பட்டார். தான் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்ததாகவும், நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட பின்னரே தன்னை அவமானப்படுத்தி வெளியேற்றியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தாம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்ருதா, தான் ஜெயலலிதாவின் மகள் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறியுள்ளார். குறிப்பாக, தேனியைச் சேர்ந்த ஒருவரிடம் ஜெயலலிதா எழுதிய உயில் இருப்பதாகவும், அந்த ஆதாரத்தை விரைவில் பொதுவெளியில் வெளியிடப் போவதாகவும் அவர் சவால் விடுத்துள்ளார். மேலும், தான் முதல்வர் பதவியை எதிர்பார்க்கவில்லை என்றும், உண்மையான வாரிசாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.