“ஒட்டுமொத்த சனியின் உருவம் சீமான்”… மறைந்த தலைவர்களை கொச்சையாக பேசினால்.. எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்..!!

By Soundarya on புரட்டாதி 27, 2025

Spread the love

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற  என்ற புதிய கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே சீமான் இந்த பக்கம் அண்ணாவை வச்சிக்கிட்டாரு, அந்த பக்கம் எம்ஜிஆர் என இரண்டு சனியன்களை கையில் எடுத்துக்கொண்டு,  ரெண்டையும் சேத்து ஒரு சட்டையை தச்சிக்கிட்டு சனிக்கிழமை சனிக்கிழமை கிளம்பிடுவாரு. இதுல என்ன மாற்றம் வருது? ” என காட்டமாக விஜய்யை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயகுமார் , “மறைந்த தலைவர்களை பற்றி கொச்சையாக பேசினால் சீமானுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். சனியில் எத்தனையோ விதம் இருந்தாலும், ஒட்டுமொத்த சனியின் ஒற்றை உருவமாக சீமான். மறைந்த தலைவர்களை பற்றி பேசி அதிமுகவிடம் சீமான் வாங்கிக்கட்டி கொள்ள வேண்டாம். சீமானுக்கு மறை கழன்று விட்டது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.