தமிழகத்தில் நாளுக்கு நாள் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் களமும் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தது பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட செங்கோட்டயன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் காத்திருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அவர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார். அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கட்சியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் செங்கோட்டையனை தொடர்ந்து அதிமுகவின் முக்கிய முகமான ஜெயக்குமாரும் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதற்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயக்குமார், இறுதி மூச்சு உள்ளவரை அதிமுகவில் தான் இருப்பேன் எனவும் உயிர் போனாலும் தன் மீது அதிமுக கொடி தான் பொருத்தப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார். செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்ததை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…
திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…
பெங்களூருவின் பன்னேருகட்டா பகுதி அருகே சி.கே. பாளையா சாலையில் அமைந்துள்ள 'ஹலேவூரு கபாப் சென்டர்' உணவகத்தில் அக்டோபர் 28 அன்று…
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…