“புரிதல் இல்லைனா செட் ஆகாது…” வாழ்க்கையில் எனக்கு பிடிக்காத விஷயம்…. ரிலேஷன்சிப் குறித்து மனம் திறந்து பேசிய ஜேசன் சஞ்சய்…!!

By Devi Ramu on ஆவணி 22, 2026

Spread the love

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் பணிகள் நிறைவடைந்து அக்டோபர் 2-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், தனது எதிர்காலக் காதலி மற்றும் ரிலேஷன்ஷிப் பற்றிய சுவாரஸ்யமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பேட்டியில், தனக்கு வரப்போகும் காதலி சுயமாகச் சம்பாதிக்கும் பெண்ணாகவும், புதிய இடங்களைச் சுற்றிப் பார்க்கும் ஆர்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காதலிப்பவர்களுக்காகத் தங்களது இயல்புத்தன்மையை மாற்றிக் கொள்ள முடியாது என்றும், ஒருவரது எல்லையைப் புரிந்து கொள்ளாதது மற்றும் எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருப்பது தனக்கு ரெட் ஃபிளாக் என்றும் கூறியுள்ளார். முக்கியமாகத் தமிழ் சினிமா, பாடல்கள் மீது விருப்பம் இல்லாத பெண்களிடம் “ஓரம் போ” என்று சொல்லி விலகி விடுவேன் என அவர் ஜாலியாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.