உலகில் எந்த ஒரு பொருளை புதிதாக கண்டுபிடிப்பதாக இருந்தாலும் ஜப்பான் தான் முதலிடத்தில் இருக்கும். மின்சாரத்தை பல வழிகளில் உற்பத்தி செய்கிறார்கள். தண்ணீரில் இருந்து ராட்சத காத்தாடியில் இருந்து என பலவழிகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறார்கள். தற்போது நடந்தால் போதும் மின்சாரம் உற்பத்தி ஆகிவிடும் என்ற புது யுக்தியின் மூலம் ஜப்பான் மின்சாரத்தை தயாரிக்கிறது. அது என்னவென்று இனி பார்ப்போம்.
ஜப்பான் மக்களின் நடைபயணத்திலிருந்து மின்சாரம் எடுக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது. உலகில் தொழில்நுட்பத்தில் மற்ற நாடுகளை விட இரண்டு படிகள் முன்னால் தான் ஜப்பான் எப்பொழுதும் இருக்கும். எந்த ஒரு சாதனம் ஆனாலும் போட்டி போட்டு ஜப்பான் உற்பத்தி செய்து உலகத்தையே ஆச்சரியமடைய செய்யும்.
அப்படி ஜப்பான் டோக்கியோவில் பரபரப்பான சாலைகளில் ஸ்மார்ட் டைல்ஸ் பதிக்கப்பட்டு அதில் மக்கள் நடந்து செல்லும் போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை தற்போது ஜப்பான் அரசு தொடங்கி செயல்படுத்த ஆரம்பித்துள்ளது.
பைசோ மின்சார தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் டைல்ஸை மக்கள் நெரிசலான பகுதிகளில் பதித்திருக்கிறார்கள். மக்கள் அந்த ஸ்மார்ட் டைல்ஸ் மீது நடந்து செல்லும் போது கைனட்டிக் எனர்ஜி மூலம் மின்சாரம் உற்பத்தி ஆகிறது. இதை ஆரம்ப கட்டத்தில் டோக்கியோவில் செய்த ஜப்பான் இப்போது நகரத்தின் பல இடங்களில் இந்த ஸ்மார்ட் டைல்ஸை பதித்து வருகிறது.
இதைப் பார்த்த சீனா போன்ற மற்ற நாடுகளும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆலோசனை செய்து வருகிறது. தொழில்நுட்பத்தில் உலகத்தின் முன்னோடியாக ஜப்பான் ஒவ்வொரு முறையும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதில் தவறுவதில்லை.