சமூக வலைதளங்களில் தங்களது அபிமான நடிகர்கள் நடித்த படம் ரிலீஸானால், படம் சுமாராக இருந்தாலும் கூட ஆஹா, ஓஹோ என புகழ்ந்து எழுதி தள்ளி, படத்தை பார்க்க வைத்து விடுகின்றனர். அதே வேளையில் தங்களுக்கு பிடிக்காத நடிகர் என்றால், படம் சுமாராக இருந்தால் கூட, மிக மோசமாக விமர்சனம் செய்து, அந்த படங்கள் திரையிட்ட தியேட்டர்களை காற்று வாங்க வைத்து விடுவதும் ரசிகர்களின் கையில் இருக்கிறது. ரசிகர்கள் நினைத்தால் சமூகவலை தளங்களில் ஒரு படத்தை உயர்வாக சித்தரிக்க முடியும். அதே வேளையில் அந்த படத்தை தியேட்டரை விட்டு ஓட வைக்கவும் முடியும்.
சமீபத்தில் வெளிவந்த கார்த்தி நடித்த ஜப்பான் படம் அந்த ரகத்தை சேர்ந்ததுதான். இந்த படத்தில், கார்த்தி பாடிய ஒரு பாடல் திரையில் வரும்போது, இந்த பாடலை பாடியது உங்கள் கோல்டன் ஸ்டார் கார்த்தி என டைட்டில் போட்டுள்ளனர். இதுபோல், ஆரம்ப காலத்தில் விஜய் நடித்த படங்களில், அவர் சொந்த குரலில் பாடும் பாடல் இடம்பெற்றால், அந்த பாடலின் துவக்கத்தில் திரையில், இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய், என எழுத்துகள் வரும். அதனால், இந்த விஷயத்தில் கார்த்தி, விஜயை கலாய்த்து விட்டார் என விஜய் ரசிகர்களிடையே கோபம் எழுந்தது.
இதன்தொடர்ச்சியாக, கடந்த 4 நாட்களாக ஜப்பான் படத்தை பயங்கரமாக கலாய்த்து, கிண்டலடித்து, கழுவி கழுவி ஊற்றிய விஜய் ரசிகர்களால், ஜப்பான் படத்தை எட்டிப்பார்க்க ஆளில்லாத அவல நிலை, தியேட்டர்களில் ஏற்பட்டு விட்டது. ஏற்கனவே பிகில் படம் வந்த போது, அதே வேளையில் கைதி படம் வந்தது. இதில் ஏற்கனவே விஜய் ரசிகர்கள் அதிருப்தியடையும்படி கார்த்தி பேசியதாக தெரிகிறது.
ஆனால், கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விஜய் நடித்த மாஸ்டர் படத்தை இயக்குவதாக இருந்ததால், கைதி படத்துக்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்போது அந்த கோபத்தையும் சேர்த்து வைத்து, செம காட்டு காட்டி விட்டனர். ஜப்பான் படம், சிங்கப்பூருக்கே போனாலும் ஜெயிக்க முடியாதுடா என்று கார்த்தி பேசிய டயலாக் பாணியில் விஜய் ரசிகர்கள் கலாய்த்து தள்ளுகின்றனர்.
நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள்,…
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில்…
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…