தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவருடைய இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ஜிகர்தண்டா. மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தேசிய விருதை பெற்று தந்தது. இந்தப் படம் சென்னையில் 100 நாட்கள் ஓடியது. இதற்குப் பிறகு பெரிய இயக்குனராக வலம் வந்த கார்த்திக் சுப்புராஜ், சூப்பர் ஸ்டாரை வைத்து எல்லாம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் ஜிகிர்தண்டா படத்தின் இரண்டாவது பாகத்தை கார்த்திக் சுப்புராஜ் தற்பொழுது இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் ஹீரோவாக நடித்துள்ளனர். ஜிகர்தண்டா படம் தீபாவளி ட்ரீட்டாக நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்திற்கு போட்டியாக நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும் வெளியானது. இரண்டு திரைப்படங்களில் வின்னராக மாறியது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தான்.
ஜப்பான் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது. இதன்படி, ஜிகர்தண்டா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 2.5 கோடி ரூபாய், 2-ம் நாள் வசூல் 4.86 கோடி ரூபாய், 3-ம் நாளில் 7. 2 கோடி ரூபாய் வசூல் செய்தது. நேற்று 4-வது நாளில் 5 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டுள்ளது.
எனவே, ஜிகர்தண்டா படத்தின் மொத்த வசூல் 4 நாட்களில் 19 கோடியாக உள்ளது. ஆனால் கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் 4 நாட்களிலும் மொத்தமாக 12 கோடி வரை தான் வசூல் செய்துள்ளதாம். தற்பொழுது இதனை ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…