actor Vijay

வாய்ப்பில்ல ராஜா… ஜனநாயகன் படம் பார்க்க ஆர்வமாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு… – இதுதான் சென்சார் போர்டு தரப்பில் கிடைக்கும் பதில்!

By Elango on மாசி 14, 2026

Spread the love

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் அந்த படம் திரைக்கு வரவில்லை. இதற்கிடையே சென்சார் போர்டு தாமதம் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் படம் ரிலீஸில் இன்னும் சிக்கல் அதிகரித்தது.

தற்போது ஒருவழியாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்ற நிலையில் ஜனநாயகன் படத்தை ரீவைசிங் கமிட்டிக்கு அனுப்பியுள்ளது. ரீவைசிங் கமிட்டி அமைத்து படத்தை பார்த்து விட்டால் சென்சார் சான்று கிடைத்து விடும். படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு விடும். ஆனால் சென்சார் ரீவைசிங் கமிட்டி படம் பார்க்க தொடர்ந்து தாமதிப்பதால் இந்த படம் ஜூன் மாதம் தான் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் இடையில் பப்ளிக் எக்ஸாம் எலக்சன் வருவதால் இதுதான் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.