Jannayakan

ஜனநாயகன் படம் ஓடும் தியேட்டர்களுக்கு சீல் வைக்க தமிழக அரசு போட்ட வாய்மொழி உத்தரவு – ஷாக் ஆன தளபதி ரசிகர்கள்!

By Elango on மாசி 11, 2026

Spread the love

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வரும் 19 அல்லது 20ம் தேதி ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் ஊழலை ஒழிப்பேன் என்கிறார். ஆனால் அவர் நடித்த படங்களின் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுகிறதே என தவெக தலைமை நிர்வாகி அருண்ராஜிடம் செய்தியாளர் கேட்டனர். அதற்கு அவர், அதுபோன்ற தியேட்டர் விதிமீறல்களை கண்காணித்து தடுக்க வேண்டிய அரசின் பொறுப்பு, அது அவர்களது வேலை என்று கூறினார்.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் வாய்மொழி உத்தரவு இதுசார்ந்த அரசு அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படம் ரிலீஸாகி தியேட்டர்களில் ஓடும்போது அங்கு ஒரு டிக்கெட் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டாலும் உடனடியாக அந்த தியேட்டருக்கு சீல் வைத்து விடுங்கள் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு விஜய் படத்துக்கு மட்டும்தானா? ரெட் ஜெயிண்ட் முவீஸ் தயாரித்தும் வெளியிடும் படங்களுக்கும் பொருந்துமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.