பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனியின் முதல் பதிவு!! … ‘என்னை மன்னித்து விடுங்கள்’… வருத்தத்தில் ரசிகர்கள்!… வைரலாகும் பதிவு இதோ!….

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனியின் முதல் பதிவு!! … ‘என்னை மன்னித்து விடுங்கள்’… வருத்தத்தில் ரசிகர்கள்!… வைரலாகும் பதிவு இதோ!….

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட முதல் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த பிக் பாஸ் எண்ணற்ற ரசிகர்களை கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்கள் திறமையை முழுமையாக நிரூபித்து விளையாடி வருகின்றனர். இந்த சீசனில் சண்டைக்கு மட்டும் பஞ்சமே இல்லை.

வாரம் ஒருவர் என பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் ஜனனி குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறி இருந்தார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இலங்கை போட்டியாளர் ஜனனி தற்பொழுது முதன் முதலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் தான் கமலஹாசன் உடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘பிக் பாஸ் வீட்டில் நான் இருந்த பொழுது எனக்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்களின் வாக்குகளால் என்னை அதிக அளவு ஊக்கப்படுத்தி உள்ளீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் உங்கள் அனைவரையும் என்னால் முடிந்த வரை மகிழ்விக்க முயற்சி செய்வேன். அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது பிக் பாஸ் ஜனனியின் இந்த முதல் பதிவானது அதிக அளவு வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த பதிவு….

 

View this post on Instagram

 

A post shared by janany (@janany_kj)

Begam