ஜனநாயகன் டிரெய்லர் ரிலீஸ் எப்போது? சுடச்சுட வெளியான லேட்டஸ்ட் அப்டேட் – குஷியான தளபதி ரசிகர்கள்!

By Elango on தை 2, 2026

Spread the love

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற 9ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 27ம் தேதி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கித் ஜலீல் ஸ்டேடியத்தில் மிக பிரமாண்டமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டிசம்பர் 31ம் தேதி இரவு 12 மணிக்கு ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டதால் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் ஆங்கில புத்தாண்டு தினத்தில் அது வெளியாகததால் தளபதி ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர்.

   

இசையமைப்பாளர் அனிருத் டிரெய்லர் உருவாக்கத்துக்கான இசையை தரவில்லை. மலேசியாவில் விழாவில் அவர் பிஸியாக இருந்து விட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் நாளை மாலை, அதாவது ஜனவரி 3ம் தேதி மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.