ஜனநாயகன் படத்தை பாதிக்கும் விஷயம்…! ஒருவேளை உண்மையா இருக்குமா…? ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

By Devi Ramu on மார்கழி 16, 2025

Spread the love

நடிகர் விஜய், எச். வினோத் இயக்கத்தில் நடித்துள்ள கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தெலுங்கில் வெற்றி பெற்ற ‘பகவந்த் கேசரி’யின் ரீமேக் என்றாலும், தமிழில் விஜய்க்கேற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது. விஜய் கடைசியாக ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்து சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று ரசிகர்களும், படக்குழுவும் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

   

இந்த நிலையில், நேற்று முழுவதும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மொத்த ரன் டைம் 3 மணி நேரம் 5 நிமிடங்கள் என்று சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிக நேரம் கொண்ட படங்கள் இதற்கு முன்பு தோல்வியைச் சந்தித்திருப்பதால், இந்த ரன் டைம் படத்தின் வெற்றியைப் பாதிக்குமோ எனச் சந்தேகம் எழுந்தது.

   

ஆனால், படக்குழுவின் தரப்பில், இந்த ரன் டைம் குறித்த செய்தி ஒரு வதந்தி என்றும், படத்தின் ட்ரிம் வேலைகள் இன்னமும் நடந்துகொண்டிருப்பதாகவும், உண்மையான ரன் டைம் இன்று இரவு 10 மணிக்குத்தான் இறுதி செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.