தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் எம்ஜிஆர். பாரத ரத்னா, பாரத், அண்ணா விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட விடுதலை தன்வசம் படுத்தினார். எம்ஜிஆருக்கு புரட்சித்தலைவர், புரட்சி நடிகர், மக்கள் நடிகர், மக்கள் கலைஞர், கலை மன்னர், கலை வேந்தர் உள்ளிட்ட ஏராளமான பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பட்டு எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
ஆனால் அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று அரசியல் கட்சியை தொடங்கி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார். கடந்த 1994-ஆம் ஆண்டு எம்ஜிஆரின் பிரச்சார வண்டி விஜயகாந்த்துக்கு கொடுக்கப்பட்டது. யார் யாரோ முயற்சி செய்தும் அது கிடைக்கவில்லை.
ஜானகி அம்மையார் அந்த வண்டியை விஜயகாந்த் கையில் கொடுத்துள்ளார். அந்த வண்டியை 2005-ஆம் ஆண்டு விஜயகாந்த் அந்த வண்டியை பயன்படுத்தியுள்ளார். அந்த வண்டியில் தான் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இந்த தகவலை விஜயகாந்த் ஒருமுறை பிரச்சாரத்தின் போது கூறியுள்ளார். கடந்த 2005-ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி கட்சியின் நிறுவனத் தலைவராக பொறுப்பேற்றார்.
வைதேகி காத்திருந்தாள், பூந்தோட்ட காவல்காரன், அம்மன் கோவில் கிழக்காலே, சின்ன கவுண்டர், ஆனஸ்ட் ராஜ், புலன் விசாரணை, வானத்தைப்போல, தவசி, ரமணா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார். விஜயகாந்த் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேமுதிக இரண்டாவது அதிக தொகுதிகளை பெற்றது. இதனால் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். உடல்நலம் குன்றி இறக்கும் காலம் வரை விஜயகாந்த் தான் தேமுதிக கட்சியின் தலைவராக இருந்தார்.