Connect with us

திடீரென தாக்கிய மர்மக் கும்பல்… ஸ்டார் படம் போல ஜனகராஜுக்கு நடந்த சம்பவம்… ஹீரோவாக வரவேண்டியவர் காமெடியன் ஆனது இதனால்தானா?

CINEMA

திடீரென தாக்கிய மர்மக் கும்பல்… ஸ்டார் படம் போல ஜனகராஜுக்கு நடந்த சம்பவம்… ஹீரோவாக வரவேண்டியவர் காமெடியன் ஆனது இதனால்தானா?

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் காமெடி நடிகராக பிரபலமானவர் நடிகர் ஜனகராஜ். 80 மற்றும் 90களில் வந்த அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய காமெடியன் ஜனாகராஜ் தான். 1978ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த  ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

ஜனகராஜ் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு கிடாரிஸ்ட்டும் ஆவார். தமிழ் சினிமாவில அதிகளவில் உலக சினிமா படங்கள் பார்த்து அறிவை வளர்த்துக் கொண்ட நடிகர்களில் ஒருவர். ஜனகராஜுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படம் எடுத்தவர்களில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர். அதுமட்டுமில்லாமல் 90 களில் ரஜினியின் அதிக படங்களில் காமெடியனாக நடித்தவரும் ஜனகராஜ்தான்.

ஜனகராஜ் காமெடியன் ஆனதே ஒரு எதிர்பாராத விபத்துதான். அவர் ஹீரோ ஆகவேண்டும் என்றுதான் சினிமாவில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். பாலைவனச் சோலை என்ற ஹிட் படத்தில் கூட ஐந்து கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார். அந்த படம் வெளியான பிறகு ஒருநாள் அவர் நள்ளிரவில் வீடு திரும்பிய போது  அவரின் காரை பணம்பறிப்பதற்காக ஒரு கும்பல் தாக்கியது. அப்போது அவர்கள் வீசிய கல் ஜனகராஜின் முகத்தில் பட்டு அவருகுக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரால் ஒரு வருடத்துக்கு நடிக்க முடியவில்லையாம். ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டிருந்த தருணத்தில் விழுந்த இந்த அடியால் அவரின் சினிமா வாழ்க்கை கேள்விக்குறியானது.

   

கிட்டத்தட்ட 1 வருடமாக சிகிச்சை எடுத்தும் அவரின் முக அமைப்பு பழைய நிலைக்கு திரும்பவில்லையாம். கண்ணாடியில் தனது முகத்தைப் பார்க்க அதிர்ந்து போயிருக்கிறார். இனி சினிமா அவ்வளவுதான் என்றிருக்கையில் அப்போது பாரதிராஜாவிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. ஒரு படம் இயக்கப் போகிறேன். அதில் நீதான் ராதாவுக்கு ஜோடி என்று கூற ஜனகராஜுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அந்தப் படம் தான்  காதல் ஓவியம். அந்த படத்தில் அவருக்கு நகைச்சுவை கலந்த வில்லன் வேடம். அந்த படம் ஓடவில்லை என்றாலும் அவரின் கதாபாத்திரம் கவனிக்கப்பட்டது.

 

அதன் பின்னர் தொடர்ச்சியாக அவருக்கு நகைச்சுவை வேடங்கள் வரத் தொடங்கியது. அதன் பின்னரே அவர் தன்னுடைய ரூட்டை மாற்றிகொண்டுள்ளார்.

 

Continue Reading
To Top