இப்படியா சொல்லி வைப்பாங்க..? ரஜினி சார் வந்து பார்த்தாரு..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த காமெடி நடிகர் ஜனகராஜ்..!

By admin on புரட்டாதி 30, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் காமெடிக்கு இணையாக காமெடியில் சிறப்பாக நடித்து மக்களிடையே பிரபலமானவர் ஜனகராஜ். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றி படங்களில் நடித்தார்.

   

80-களில் தொடங்கி 90-களில் இறுதிவரை ஜனகராஜ் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால் ஜனகராஜ் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக வதந்திகள் பரவியது.

   

 

இந்நிலையில் சமீபத்தில் ஜனகராஜ் அளித்த பேட்டியில் நான் சென்னையில் தான் இருக்கிறேன். நான் அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டதாக கூறி வருகின்றனர். நான் அமெரிக்காவுக்கு போனதே இல்லை. உடம்பு சரி இல்லாம இருந்த என்னை ரஜினி சார் வந்து பார்த்ததாக சொல்றாங்க. இது எப்போ நடந்தது என்று எனக்கே தெரியவில்லை.

என்னிடம் பாஸ்போர்ட்டும் இல்லை, விசாவும் கிடையாது. அப்படி இருக்க நான் எப்படி அமெரிக்காவுக்கு போக முடியும். கடைசியாக 96 படத்திலும் தாதா 87 படத்திலும் நடித்திருந்தேன். என்னைப் பற்றி வதந்திகள் பரப்புகின்றனர். எத்தனை பேருக்கு நான் விளக்கம் கொடுக்க முடியும். இப்போது நான் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். என் மனைவி என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார் என கூறினார்.