Connect with us

நாயகன் படத்தில் ஜனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. மணிரத்னம் செய்த குளறுபடியால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டம்!

CINEMA

நாயகன் படத்தில் ஜனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. மணிரத்னம் செய்த குளறுபடியால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் காமெடி நடிகராக பிரபலமானவர் நடிகர் ஜனகராஜ். 80 மற்றும் 90களில் வந்த அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய காமெடியன் ஜனாகராஜ் தான். 1978ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த  ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

ஜனகராஜ் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு கிடாரிஸ்ட்டும் ஆவார். தமிழ் சினிமாவில அதிகளவில் உலக சினிமா படங்கள் பார்த்து அறிவை வளர்த்துக் கொண்ட நடிகர்களில் ஒருவர். ஜனகராஜுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படம் எடுத்தவர்களில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர். அவரோடு ஜனகராஜ் இணைந்து நடித்த நாயகன், அபூர்வ சகோதரர்கள் மற்றும் குணா போன்ற படங்கள்தான் அவரின் கேரியரில் அவர் நடித்த சிறப்பான படங்கள் என சொல்லலாம்.

நாயகன் படத்தில் ஜனகராஜுக்கு ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. அந்த படத்துக்கு முதலில் ஜனகராஜ் கதாபாத்திரத்துக்கு 10 நாட்கள் மட்டும் போதும் என்று சொல்லியுள்ளார் மணிரத்னம். அதனால் அவருக்கு சம்பளம் பேச சென்றுள்ளனர் தயாரிப்பாளர்கள். அப்போது அவர் ஒரு லட்ச ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் அவ்வளவு சம்பளம் கொடுக்க விரும்பாத தயாரிப்பாளர்கள் ‘உங்களுக்கு ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் தருகிறோம்” என கூறியுள்ளனர்.

   

10 நாளைக்குள் அவர் காட்சிகள் முடிந்துவிட்டால் ஐம்பதாயிரம் ரூபாயில் முடித்துவிடலாம் எனக் கணக்குப் போட்டுள்ளனர். ஆனால் மணிரத்னம் கமல்ஹாசன் நடித்த அனைத்து நாட்களும் ஜனகராஜையும் வரவழைத்துள்ளார். இதனால் அவர் நாயகன் படத்தில் 100 நாட்களுக்கு மேல் நடித்தாராம். இதனால் அவருக்கு சம்பளம் மட்டும் 5 லட்ச ரூபாய்க்கு மேல் சென்றுள்ளது.  அப்போது மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த கவுண்டமணிக்குக் கூட அவ்வளவு சம்பளம் இல்லையாம்.

 

இதற்குப் பேசாமல் அவர் கேட்ட ஒரு லட்ச ரூபாயையே கொடுத்திருக்கலாம் என தயாரிப்பாளர்கள் நொந்து கொண்டார்களாம். இந்த தகவலை தயாரிப்பாளர் முக்தா சீனிவாசனின் மகன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். ஆனால் படம் ரிலீஸான பின்னர் ஜனகராஜின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரிய ஆதாரவைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Continue Reading
To Top