“அவரை அந்த சீட்ல உட்கார வச்சதே தப்பு”…. அத்திப்பழத்துப் புழு போன்ற அரசு…. முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஜேம்ஸ் வசந்தன்….!

Spread the love

தமிழக அரசியலில் முன்னணி நடிகரான விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றார். சுமார் ஆறு தசாப்தகால தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத மாற்றமாக, கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் பங்கு வழங்கி அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஆட்சியை அமைத்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். தவெகவின் இந்த அதிரடி அசுர வளர்ச்சியையும் விஜய் முதலமைச்சரானதையும் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பாரம்பரியக் கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவிலை என்றும், அதன் காரணமாகவே அவர்கள் தொடர்ந்து இப்புதிய அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள் என்றும் தவெக அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அரசியல் களத்திற்கு அப்பாற்பட்டு திரைத்துறை சார்ந்த முக்கியப் பிரபலங்களான பா.ரஞ்சித், அமீர் மற்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் போன்றோரும் புதிய தவெக அரசின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய ஜேம்ஸ் வசந்தன், “இப்போதும் என் கணிப்பு பொய்க்கவில்லை; நான் நினைத்ததை விடவும் விஜய் மிகவும் மோசமாகச் செயல்படுகிறார். அவரை அந்த உயர்ந்த இடத்தில் அமர வைத்திருக்கவே கூடாது” எனத் தனது அதிருப்தியை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த மூன்று மாதகால தவெக ஆட்சியில் எந்தவொரு முன்னேற்றமும் மாற்றமும் நிகழவில்லை என்று சாடினார். “அரசு அதிகாரிகள் வழக்கம் போல் தங்கள் கடமைகளைச் செய்வதால்தான் அமைச்சுப் பணிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றனவே தவிர, புதிய அரசின் தனித்துவமான செயல்பாடு எதுவும் இல்லை. விஜயின் ஆட்சி என்பது அத்திப்பழத்துப் புழு போன்றது; பழம் மலரும் போதே அதற்குள் உருவாகும் புழு, அங்கேயே வாழ்ந்து மடிவது போல இந்த அரசும் பெயருக்கு உயிரோடு இருக்கிறதே தவிர, மக்களுக்கோ நாட்டிற்கோ இதனால் எந்தப் பயனும் இல்லை” என அதிரடியான ஒப்பிட்டுடன் தனது விமர்சனத்தை முடித்துள்ளார்.

Nanthini

Recent Posts

“குடும்ப ரகசியம் மொத்தமும் லீக்…” பிரிய போன குடும்பத்தை காப்பாற்றிய பக்கத்து வீட்டு ஆண்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் குடும்ப டிராமா…!!

ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…

2 minutes ago

நம்பர் பிளேட் இல்ல..! “ஆமா.. நான் குடிச்சிருக்கேன்!”… சீருடையில் உளறிய பெண் காவலர்… நடுரோட்டில் மடக்கிய பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…

3 minutes ago

அசுர வேகம்…! உயிர் தப்பிய பைக் ஓட்டுநர்… நடுரோட்டில் புரண்ட கன்டெய்னர்… மரண பயத்தை காட்டிய விபத்து… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!!

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…

8 minutes ago

செகண்ட்ல காலி… அலறிய ரயில் ஹார்ன்… காதுல இயர்போன்… பின்னாடி வந்த மரணம்… நொடியில் முடிந்த உயிர்… நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி…!!

ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…

15 minutes ago

அடுத்து யார் டார்கெட்?… மறுஆய்வு மனு தள்ளுபடி… திமுக புள்ளிகளுக்கு அடுத்தடுத்து செக்… கதவை தட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் கே.என்.நேரு…!!

திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்…

24 minutes ago

அடகடவுளே..! இடித்து தள்ளிவிட்டு எஸ்கேப்!… உயிருக்கு போராடும் இளைஞர்… நிற்காமல் பறந்த ஃபார்ச்சூனர்… பதறவைக்கும் CCTV காட்சிகள்…!!

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பாசாபுரா பகுதியில், அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று மோட்டார் சைக்கிள்…

31 minutes ago