பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, பிரீநிதி சோப்ரா ஐயோரின் உறவினரான மீரா சோப்ரா தமிழில் நிலா என்ற பெயரில் திரையுலகில் அறிமுகமானார். கடந்த 2005-ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான அன்பே ஆருயிரே படத்தில் நிலா திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பிறகு நிலா ஜாம்பவான், லீ, மருதமலை, காளை, ஜெகன் மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த மருதமலை படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தெலுங்கு, கன்னடம், ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக எஸ்.ஜே சூர்யா இயக்கிய இசை படத்தில் நிலா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் கில்லாடி படத்திலும் நடித்தார்.

இந்நிலையில் ஜாம்பவான் படத்தின் இயக்குனர் நந்தகுமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஜாம்பவான் படத்தின் ஒரு காட்சியை குற்றாலத்தில் எடுத்தோம். குற்றாலத்திற்கு கீழே 12,000 லிட்டர் கொள்ளளவு உடைய தொட்டியில் நிலாவும், அவரது தோழிகளும் குளிப்பார்கள்.

அப்போது பிரசாந்த் வந்தவுடன் தோழிகள் ஓடிவிட நிலா மட்டும் வந்து தொட்டிக்குள் மூழ்குவது போன்ற காட்சிகள் இருக்கும். அந்த ஷூட்டிங்கின் பொது நிலா நான் தண்ணீரில் குளிக்க மாட்டேன். ஒன்று ஷவரில் குளிப்பேன். அப்படி இல்லை என்றால் தொட்டியில் மினரல் வாட்டரை ஊற்றுங்கள் என கூறினார்.
அதற்கு நான் 12000 லிட்டர் மினரல் வாட்டர் ஊற்றினால் தயாரிப்பாளர் நிலை என்னவாகும் என கூறினேன். ஆனால் நிலா ஒத்துக்கொள்ளவே இல்லை. ஷூட்டிங்கில் இருந்து கிளம்பி விட்டார். அதன் பிறகு பாங்காக்கில் சென்று அந்த காட்சியை படமாக்கினோம் என கூறியுள்ளார்.

