3 வருஷம் ஒண்ணா குடுத்தனம்.. ஆனா இப்போ.. விவாகரத்து குடுங்க வேற ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிக்குறன்.. ரஜினி மருமகளின் கணவர் பரபரப்பு பேட்டி..

By Archana on தை 2, 2024

Spread the love

சினிமாவில் நட்சத்திரங்கள் திருமணம் செய்துக் கொள்வதும், பிறகு அவர்களே பிரிந்து போவதும், சகஜம். அதே நேரம், இருவரும் நேர் எதிரே நின்று சண்டையிடுவதும் வழக்கமான ஒன்று. அப்படி, திருமணமான சிறிது காலத்திலேயே விலகிய நட்சத்திரங்களான அபி சரவணன் மற்றும் மிர்னா மேனன் சர்ச்சை குறித்து, அபி சரவணன் சமீபத்தில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். முதலில் இவர்களது வாழ்க்கை குறித்து பின்னோக்கி பார்ப்போம். . கடந்த 2016-ல் வெளியான பட்டதாரி என்கிற படத்தில் கதாநாயகன் நாயகியாக இணைந்து நடித்தவர்கள் அபி சரவணன் மற்றும் அதிதி மேனன்.

#image_title

தற்போது சரவணன் விஜய் விஷ்வா என தனது பெயரை மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார். அதேபோல அதிதி மேனன் தற்போது மிர்னா மேனன் என தனது பெயரை மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே காதல் மலர, இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவின. அதன் பிறகு மூன்று வருடங்கள் கழித்து, அபி சரவணனுக்கும் தனக்கும் திருமணம் நடக்கவில்லை என்றும் ஆனால் போலியான சான்றிதழ்களை வைத்து தன்னை அவர் மிரட்டுகிறார் என்றும் காவல்துறையில் புகார் அளித்தார் மிர்னா மேனன்.

   
   

#image_title

 

அபி சரவணனுக்கு முன்பே பல பெண்களுடன் தொடர்பு இருந்தது என்றும் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் அந்த புகாரில் கூறியிருந்தார் மிர்னா மேனன். இதுகுறித்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மிர்னா மேனன் மீது குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் அபி சரவணன். இவ்வழக்கை தள்ளுபடி செய்யுமாறு மிர்னா தரப்பில் இருந்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 2021-ம் ஆண்டு இறுதியில், இவ்வழக்கில், அபி சரவணனனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. திருமணம் நடந்தது உண்மை என்பதால் இருவரும் இணைந்து வாழ வேண்டும் எனக் கூறி, மிர்னாவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்ற உத்தரவை அடுத்து, மிர்னாவை தன்னுடன் வந்து வாழ வருமாறு கட்டாயப்படுத்த மாட்டேன் எனவும், அவருக்காக காத்திருப்பேன் எனவும் அபி சரவணன் கூறியிருந்தார்.

#image_title

இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சரவணன், மிர்னாவுக்கும் தனக்கும் திருமணம் நடந்து மூன்று வருடங்கள் ஒன்றாக குடும்பம் நடத்தியதாகவும், இருமுறை மிர்னா கருக்கலைப்பு செய்தததாகவும் கூறியிருக்கிறார். நீதிமன்ற உத்தரவையும் மீறி அவர், சேர்ந்து வாழ விருப்பம் இல்லை எனக் கூறி வரும் நிலையில், விவாகரத்து கொடுத்துவிட்டால் அடுத்த திருமணத்திற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். தனது பெற்றோர் பெண் பார்க்க தயாராக இருப்பதாகவும், விரைவில் விவாகரத்து தந்தால், அடுத்ததாக கல்யாண விருந்து கொடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.

#image_title