“தலைவரு நிரந்தரம்…! 5 நாட்களில் விஜய்யின் சாதனையை தகர்த்தெறிந்த ஜெயிலர் 2… இணையத்தை அதிரவைக்கும் லேட்டஸ்ட் சினிமா அப்டேட்…!!

By Devi Ramu on ஐப்பசி 20, 2026

Spread the love

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம், வெளியான 5 நாட்களில் நடிகர் விஜய்யின் ‘லியோ’ படத்தின் தமிழக வசூல் சாதனையைச் சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளது. சாக்னிக் தரவுகளின்படி, ‘லியோ’ திரைப்படம் தமிழ்நாட்டில் செய்த ரூ.171.45 கோடி வசூல் சாதனையை, ‘ஜெயிலர் 2’ வெறும் 5 நாட்களில் 40,397 காட்சிகளுடன் ரூ.175.10 கோடி வசூலித்து முறியடித்துள்ளது.

அதுமட்டுமின்றி, 6-வது நாளான இன்று மதியம் காட்சிக்கு முன்பாகவே இப்படம் உலகளவில் 500 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி திரையுலக ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து வருகிறது.