‘JAILER 2’ குறித்து வெளிவந்த மாஸ் அப்டேட்.. இரண்டாம் பாகத்தில் பேரன் தான் முக்கிய கதாபாத்திரமாம்..

By Sumathi

Updated on:

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் 500 கோடி ரூபாய் தாண்டி, வசூலில் சக்கைப் போடு போட்டது. இந்த படத்தில் ரஜினி ஸ்டண்ட் காட்சிகளில் அடிதடி களத்தில் இறங்காமல் மாஸ் காட்டி நடந்தே, ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டு விட்டார். 70 வயதுக்கு மேலான ஒருவரை அதிக ஹீரோயிசம் காட்ட வைத்தால், அதுவே படத்துக்கு மைனஸ் பாயிண்டாகி விடும் என்பதை புரிந்து வைத்து, அதையே பிளான் ஆக்கி ஜெயிலரில் ஜெயித்து விட்டார் நெல்சன். அவருக்கு பதிலான நான்கைந்து அடியாட்களை வைத்துக்கொண்டு வில்லன்களை துவம்சம் செய்யும் ரஜினியின் பாணி, பாட்ஷா படத்தில் அறிமுகமானது. பேட்ட, அண்ணாத்த, ஜெயிலர் என தொடர்கிறது.

   

வழக்கமாக தனது படங்களில் எதுவும் 2ம் பாகம் நடிக்க ரஜினிகாந்த் விருப்பம் காட்டியதில்லை. பில்லா மற்றும் பில்லா 2 படங்களில் அஜீத் நடித்தார். சந்திரமுகி 2 படத்தில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடித்தார். ஆனால் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினிகாந்த் நடிக்க சம்மதிக்க காரணம் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன். கார் வாங்கி கொடுத்த படத் தயாரிப்பு முதலாளிக்கு செய்யும் நன்றிக்கடனாக இதற்கு ஓகே சொன்னார் ரஜினி. இன்னும் ஒரு 500 கோடி ரூபாயை அள்ளத் திட்டமிட்ட கலாநிதி மாறன், நெல்சனுக்கு ஒரு பெரிய அட்வான்ஸ் தொகையை தந்துவிட்டார். அவரும் டிஸ்கஷனில் இப்போது தீவிரமாக இருந்து வருகிறார்.

ஜெயிலர் 2 படத்தை படத்தை பொருத்த வரை, ரஜினியின் பேரனாக நடித்த ரித்வித் தான் மெயின் ரோலில் நடிக்கிறார். அவரை மையப்படுத்தி தான் கதை உருவாகிறது. ரஜினிக்கு பேரனாக நடித்தவர், அதே சிறுவன் தோற்றத்தில் ஜெயிலர் 2விலும் அதே கேரக்டரில் வருவாரா, அல்லது அவரை வளர்ந்த வாலிபராக வேறு யாரேனும் பிரபல ஹீரோவை நடிக்க வைத்த, அப்பாவை கொன்ற தாத்தாவை பழி வாங்குவாரா அல்லது தாத்தாவுக்கு ஆதரவாக அவருடன் சேர்ந்துக்கொண்டு எதிரிகளை பழிவாங்குவாரா என ஜெயிலர் எழுதும் ஸ்கிரிப்டில்தான் இருக்கிறது. ஆனால் குருவி தலையில் பனங்காய் என்பது போல, ஜெயிலர் 2 பாகம், ரஜினியின் பேரனாக நடித்த ரித்விக் என்னும் அந்த சின்ன குட்டி பையனை மையப்படுத்திய கதையாக தான் உருவாகிறது.

author avatar
Sumathi