மாஸ் காட்டிய சூப்பர் ஸ்டார்…! பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய ஜெயிலர் 2… முதல் நாள் வசூல் இத்தனை கோடியா…? அதிரவைக்கும் லேட்டஸ்ட் தகவல்…!!

By Devi Ramu on ஐப்பசி 16, 2026

Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் நேற்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளதுடன், பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையைத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் திருவிழாபோல் கொண்டாடப்பட்டு வரும் இப்படத்தின் முதல் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.

பிரபல பாக்ஸ் ஆபிஸ் கண்காணிப்புத் தளமான சாக்னில்க் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 70 கோடியே 25 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது. இதில் தமிழில் ரூ.43.35 கோடியும், தெலுங்கில் ரூ.12.50 கோடியும், ஹிந்தியில் ரூ.3.50 கோடியும் வசூலாகியுள்ளது. மேலும், வெளிநாடுகளில் சுமார் ரூ.55 கோடியைக் சேர்த்து, உலக அளவில் முதல் நாளில் மொத்தம் 125 கோடியே 25 லட்சம் ரூபாயை இப்படம் வாரிக் குவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மிக விரைவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாதனையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.