“பெத்த தகப்பனை உங்களால கவனிக்க முடியாதா..?” 84 வயது முதிய தந்தையை தவிக்கவிட்ட 3 மகன்கள்.. சிறையில் தள்ளிய நீதிமன்றம்..!!

Spread the love

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிப் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (84). இவரது மனைவி இறந்த பிறகு, மகன்கள் வரதராஜன், திருமுருகன் மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். வயதான காலத்தில் மகன்கள் தன்னை கவனிக்காமல் தவிக்கவிட்டதால், கடந்த 2018-ஆம் ஆண்டு காரைக்கால் சார்பு நீதிமன்றத்தில் முனுசாமி பராமரிப்புத் தொகை கோரி மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மகன்கள் மூவரும் தலா 2,000 ரூபாயைத் தந்தைக்கு மாதந்தோறும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மகன்கள் மாவட்ட ஆட்சியரிடமும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்த போதிலும் அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையே, கடந்த 2018 முதல் 2026 வரையிலான 71 மாதங்களாகத் தமக்கு எந்தவொரு பராமரிப்புத் தொகையையும் மகன்கள் வழங்கவில்லை எனக் கூறி முனுசாமி மீண்டும் நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கை விசாரித்த காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியரும் சார்பு நீதிமன்ற நீதிபதியுமான பூஜா, நீதிமன்ற உத்தரவை அவமதித்து முதியவருக்கு உதவித்தொகை வழங்காத குற்றத்திற்காக 3 மகன்களையும் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி கைது செய்யப்பட்ட அவர்களுக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், முழுத் தொகையையும் வழங்காவிடில் சிறைத்தண்டனை தொடரும் என்றும் நீதிபதி அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.


Soundarya

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

3 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

3 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

3 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

3 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

4 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago