நடிகர் ஜெய் தவறவிட்ட மெகா ஹிட் படங்கள்.. VTV படத்தில் சிம்புக்கு பதிலாக நடிக்க இருந்தது இவர்தானா..!

By Ranjith Kumar

Updated on:

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெய். இவர் தெலுகு, மலையாளம், தமிழ் போன்ற முன்னணி மொழிகளில் நடித்து வருகிறார். இவர் முதல் முதலில் பகவதி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து மிக பிரபலமாக வளர்ந்தார். அதன் பின்னதாக வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் சென்னை 28 படத்தில் நடித்து தான் சிறந்த நடிகர் என்று தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து சசிகுமார் இயக்கத்தில் சுப்பிரமணியபுரத்தில் முன்னணி நடிகராக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு மாபெரும் இடத்தை பிடித்தார். இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிய ஆரம்பித்தது, அந்த வரிசையில் சென்னை 28 பாகம் 2, ராஜா ராணி, கலகலப்பு, பலூன் போன்ற படங்களில் நடித்து மெகா பஸ்டர் ஹிட்டுகளை அள்ளிக் கொடுக்க ஆரம்பித்தார். தற்போது வரை முன்னணி நடிகராக நடித்து வரும் ஜெய். ஆரம்ப காலகட்டத்தில் மெகா பஸ்டர் அடித்த பல திரைப்படங்களை கைநழுவ விட்டிருக்கிறார். அந்த வரிசையில் சசிகுமார் இயக்கத்தில் சமுத்திரகனி, சசிகுமார் நடிப்பில் வெளியான படம் தான் நாடோடிகள். இப்படத்தில் முதன் முதலில் ஜெய் அவர்களை தான் நடிக்க சசிகுமார் கேட்டு உள்ளார்.

   

ஆனால் சில பல காரணத்தால் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதற்கு அடுத்ததாக ஜீவா நடிப்பில் மெகா பாஸ்டர் ஹிட் அடித்த “சிவா மனசுல சக்தி” என்ற படத்தில் முதல் முதலாக ஜெய் அவர்களை தான் நடிக்க கேட்டு உள்ளார்கள். சுப்பிரமணியபுரத்திற்காக தாடி வைத்திருந்ததால் இப்படத்தில் நடிக்க முடியாமல் கைநழுவ விட்டு விட்டார். அதன் பின் சிம்பு நடித்த தற்போது வரை ரீ-ரீலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் படம் தான் “விண்ணைத்தாண்டி வருவாயா”. இப்படத்திற்காக முதல் முதலில் ஜெய் அவர்களை தான் இயக்குனர் கௌதம் மேனன் அணுகி உள்ளார். ஆனால் அந்த சமயத்தில் மூன்று படங்களில் தொடர்ச்சியாக கமிட் ஆகியிருந்த ஜெய், இப்படத்தை வேறு வழியில்லாமல் விட வேண்டியதாகி விட்டதாம்.

இறுதியாக ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பு வெளிவந்து பட்டி தொட்டி எல்லாம் பட்டய கிளப்பிய படம் தான் “ராட்சசன்”. இப்படத்தில் முதல் முதலில் ஜெய் அவர்களை கேட்டபோது ஜெய்க்கு பிடித்து போக, இப்படத்தின் கதைக்காக கிட்டத்தட்ட ஆறு மாத காலம் ஜெய்யும் ராம்குமார் ஒன்றாக இணைந்து பணிபுரிந்து உள்ளார்கள். ஆனால் பின்பு இப்படத்தின் தயாரிப்பாளர் மாறியதால் படத்தில் வேறு வழியின்றி ஜெய் அவர்கள் நீக்கப்பட்டு, விஷ்ணு விஷால் நடித்து மாபெரும் வெற்றி அடைந்தது.

author avatar
Ranjith Kumar