சினிமா பார்ப்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும் சீரியல்கள் பார்ப்பதற்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீப காலமாக அதிக அளவில் சீரியல் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனவே தான் சன் டிவி ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியலை பார்த்து ஏழு நாட்களும் ஒளிபரப்பி வருகிறது. வெள்ளித்திரை ஹீரோயின்கள் கூட திரைப்பட வாய்ப்பு கிடைக்காத நிலையில் சின்ன திரையில் நடிக்க தொடங்கி விடுகிறார்கள்.

அதேபோல சீரியலில் நடிக்கும் ஹீரோயின்களும் சின்னத்திரை மூலமாக வெள்ளித்திரையை கைப்பற்றுவதிலும் ஆர்வத்தை காட்டி வருகிறார்கள். இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்ட சீரியல் நெஞ்சத்தைக் கிள்ளாதே. இந்த சீரியலில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடிக்கிறார் . இவருக்கு ஜோடியாக விஜய் டிவி கிழக்கு வாசல் தொடரில் ஹீரோயினாக நடித்த ரேஷ்மா நடித்து வந்தார்.

ஹிந்தி சீரியல் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடருக்கு டிஆர்பி ரேட்டிங் கிடைக்காததாலும், இன்னும் ஒரு சில காரணங்களுக்காகவும் இந்த சீரியலை அந்த சேனல் முடிவுக்கு கொண்டு வரவுள்ளது . சீரியல் தொடங்கி ஆறு மாதத்தில் சீரியல் முடிவடை உள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது . ஆனால் நடிகர் ஜெய் ஆகாஷ்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் சின்னத்திரை பக்கம் உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய சீரியல் நடிகர் ஜெய் ஆகாஷ், “எனக்கு கால்ல அடிபட்டு இருந்ததுனால தொடர்ந்து சீரியல் நடிக்க முடியாது என்று சொன்னேன். ஒரு வாரம் சீரியலில் நடிக்கவில்லை என்றதும் டிஆர்பி குறைந்தது. அதனால் சேனல் தரப்பினர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள் . என்னால் முடியாது ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொன்னதால் சீரியலை முடிவுக்கு வந்தது கொண்டு வந்து விட்டார்கள். இதற்கு வேறு எந்த காரணமும் கிடையாது. நான் இல்லாமல் வேறு யாரையாவது வைத்து இந்த சீரியலை எடுக்குமாறு நான் புரொடியூசரிடம் சொன்னேன். அவரும் நிறைய பேரை suggest பண்ணிருக்காரு.

ஆனால் சேனல் தரப்பு ஜெ ஆகாஷ் இல்லாமல் வேறு யாரும் வேண்டாம் என்று சொல்லியிருக்காங்க. நான் கூட ரேஷ்மாகிட்ட சொன்னேன். அவங்களுக்கு கோடா இது தெரியும். மேலும் என் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தணும்னு தான் முதலில் ஒரு போஸ்ட் போட்டேன். ஆனா அதை பார்த்து ரேஷ்மா தோழி நக்ஷத்திரா உருட்டு உருட்டு என்று நக்கலாக கமெண்ட் செய்துள்ளார் இது டீசென்ட்டா இல்ல. . இதனால் என்னோட ரசிகர்கள் கோபமாகிட்டாங்க” என்று பேசியுள்ளார்.
