கோலமாவு கோகிலா ஜாக்குலின் வாழ்வில் இப்படியொரு கசப்பான அனுபவமா..? முன்னாள் காதல் குறித்து ஒபன் டாக்.. இணையத்தைக் கலக்கும் ஷாக்கிங் பேட்டி..!

By Swetha on ஆனி 3, 2026

Spread the love

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான ஜாக்குலின், தனது முன்னாள் காதலரின் மோசமான நடத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ரக்ஷனுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி பிரபலமானவர் ஜாக்குலின். பின்னர் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் முத்திரை பதித்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று மக்களின் கவனத்தைப் பெற்றார். குறிப்பாக, ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் தங்கையாக நடித்து ரசிகர்களின் பலத்த பாராட்டுகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ஜாக்குலின், தனது தற்போதைய காதலர் யுவராஜுடன் இருக்கும் புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வந்தார். தன் கடந்த கால காதல் வாழ்க்கை குறித்து எந்தவொரு மேடையிலும் பேசாத அவர், தற்போது முதன்முறையாகத் தனது முன்னாள் உறவில் சந்தித்த கசப்பான அனுபவம் ஒன்றை உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

   

அப்பேட்டியில் அவர் கூறுகையில், ஒருமுறை தனது முன்னாள் காதலனின் வீட்டிற்கு அருகில் நடிகை நயன்தாராவின் படப்பிடிப்பு நடந்துள்ளது. அப்போது அங்கு நயன்தாரா பயன்படுத்திய காலணியைப் பார்த்துவிட்டு வந்த அவனது முன்னாள் காதலன், “அங்கு நயன்தாராவின் செருப்பைப் பார்த்து நான் ரசித்த அளவில் ஒரு சதவீதம் கூட உன்னை நான் ரசித்தது கிடையாது” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறியுள்ளார். தன் காதலனிடமிருந்து வந்த இந்த வார்த்தைகள் தனக்கு பெரும் மனவேதனையை அளித்ததாக ஜாக்குலின் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.