BREAKING: விஜய்க்கு ஆதரவு கொடுத்தார்… தமிழக அரசியலில் யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பம்….!

By Nanthini on மாசி 25, 2026

Spread the love

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ. தீபா, தமிழக அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்துப் பேசிய கருத்துகள் தற்போது கவனத்தைப் பெற்றுள்ளன. செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் அரசியலுக்கு வந்துள்ளது அனைத்துக் கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார். விஜய் அதிமுகவின் ஓட்டுகளை மட்டும் பிரிக்கப் போவதில்லை என்றும், அவர் அனைத்துக் கட்சியினரின் வாக்குகளையும் சரிசமமாகப் பிரிப்பார் என்றும் தீபா கணித்துள்ளார். மேலும், விஜய்யின் தற்போதைய மேடைப் பேச்சுகள் அனைத்தும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா பேசிய கருத்துகளின் பிரதிபலிப்பாகவே இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான தனது அதிருப்தியையும் இந்தச் சந்திப்பில் ஜெ. தீபா வெளிப்படுத்தினார். ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கப் பலமுறை முயற்சி செய்தும், அவர் தன்னைச் சந்திக்க அனுமதி வழங்கவில்லை என்று தீபா குற்றம் சாட்டினார். தன்னை வேண்டும் என்றே அவர் தவிர்ப்பதாகத் தோன்றுவதாகக் கூறிய தீபா, தன்னை ஒதுக்குவதற்கு அவர் யார்? என்ற கேள்வியையும் எழுப்பினார். விஜய்யின் அரசியல் வருகை ஒருபுறம் அதிர்வை ஏற்படுத்தினாலும், அதிமுக உட்கட்சி விவகாரங்கள் மற்றும் தீபாவின் இந்த விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.