BIG BREAKING: போட்டியின்றி சபாநாயகராக தேர்வானார் ஜே.சி.டி. பிரபாகர்..!!

By Soundarya on வைகாசி 11, 2026

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், அவர்களைத் தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக, இருவரும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தற்காலிக சபாநாயகர் கருப்பையா நாளை சட்டமன்றத்தில் முறைப்படி வெளியிட உள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகப் பொறுப்பேற்று அவையை வழிநடத்துவார். புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் வருகையை ஒட்டி சட்டமன்றப் பணிகள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரத் தொடங்கியுள்ளன.