அடேங்கப்பா..! இவர் இயக்கிய திரைப்படங்களா இதெல்லாம்.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே..

By Mahalakshmi on மே 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற இயக்குனர் ஜெகன் இயக்கிய திரைப்படங்களைப் பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம். பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் இயக்குனர் ஜெகன். இவர் இயக்குனர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

   

மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் மணிவண்ணன் அவர்களின் மூன்றாவது மகனாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இவர் தமிழ் சினிமாவில் மொத்தம் நான்கு திரைப்படங்களை மட்டுமே இயக்கி இருக்கின்றார். 2003 ஆம் ஆண்டு ஜெகன் இயக்கத்தில் நடிகர் விஜய், மீரா ஜாஸ்மின், அமிஷா பட்டேல், கலாபவன் மணி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வெளியான திரைப்படம் புதிய கீதை.

   

 

இந்த திரைப்படத்தை இயக்கியது ஜெகன் தான். விஸ்வாஸ் சுந்தர் தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் பெரிய அளவு வரவேற்பை பெறவில்லை. ஜெகன் இயக்கிய முதல் திரைப்படமே புதிய கீதை தான். அதைத் தொடர்ந்து பல புதிய நடிகர்களை வைத்து கோடம்பாக்கம் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

பின்னர் சேரன் அவர்களை வைத்து ராமன் தேடிய சீதை என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு என் ஆளோடு செருப்ப காணோம். என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் கயல் ஆனந்தி மற்றும் பார்த்திபன் நடித்த பல பிரபலங்களும் நடித்திருந்தார்கள்.

அதன் பிறகு திரைப்படங்கள் இயக்குவதை நிறுத்திக் கொண்ட ஜெகன் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார். தற்போது முன்னணி இயக்குனர்கள் இயங்கும் படத்தின் கதை விவாதத்தில் பங்கேற்று வருகிறார்.  இவர் இயக்குனராக என்று பலரும் ஆச்சரியப்பட்டு வரும் நிலையில் புதிய கீதை திரைப்படத்தை இயக்கியவர் இவர்தான் என்று தெரிந்ததும் பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.