‘எதிர்காலத்தை திருடுவதற்கான நேரம் இது’… நடிகர் விஷால் வெளியிட்ட வைரல் வீடியோ… சீக்கிரமா இதை முதல பாருங்க…

By Begam on ஆடி 20, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான லத்தி திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் தற்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பில் நடிகர் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி.

   

திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சுனில், ,செல்வராகவன் மற்றும் அபிநயா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

   

 

இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் டைம் ட்ராவல் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட டப்பிங் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் விஷால். இவர் தற்பொழுது தனது ரசிகர்களுக்கு மோட்டிவேஷனாக சில தகவல்களை இணையத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Vishal (@actorvishalofficial)