நடிகர் விஜய் சேதுபதியுடன் எனக்கு திருமணம் ஆகி 10 வருடம் ஆகிடுச்சா?… பிரபல நடிகையின் ஓபன் டாக்!… இதோ!…

By Begam

Published on:

இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் கடந்த 2012 ல் ‘வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை காயத்ரி. குறைந்த பட்ஜெட்டில் தயாராகி மாபெரும் வெற்றியை பெற்றது இப்படம். படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் காயத்ரி. இவரின் நடிப்பு திறமையை பார்த்து வியந்து போன நடிகர் விஜய் சேதுபதி தனது அடுத்த அடுத்த படங்களின் நடிக்கும் வாய்ப்ப்பை இவருக்கு அளித்தார்.

   

நடிகர் விஜய் சேதுபதியுடன் நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, சீதக்காதி ,ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார், மாமனிதன் என 8 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் காயத்ரி.. தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதியுடன் அதிக படங்களில் நடித்துள்ள நடிகை இவர்மட்டுமே.

இவர் தற்பொழுது பகிரா, மாமனிதன், இடி முழக்கம், டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும் போன்ற  திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் தமிழில் மட்டும் இன்றி மலையாள படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், தனது சினிமா பயணம் குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

இதில் அவர் கூறுகையில் ‘நான் முதலில் படம் நடித்து ரொம்ப சந்தோஷப்பட்டேன். என் கல்லூரி நண்பர்களுக்கு கூட நான் படம் பண்ணி இருக்கேன். பெரிய பெரிய தடைகளையும், வதந்திகளையும் தாண்டி வந்திருப்பதாக கூறியுள்ளார். அந்த வகையில் ‘விஜய் சேதுபதி உடன் கல்யாணமாகி எனக்கு 10 வருஷம் ஆயிடுச்சு’ என்று கூட சொன்னாங்க.

தொடர்ந்து அவர்கூட படம் பண்றதுனால என்னவோ தெரியல என்று கூறி சிரித்துள்ளார். இதை தொடர்ந்தவர் தன் சினிமா பயணம் குறித்த பல நிறைய அனுபவங்களை மனம் திறந்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.